"டேய்... என்ன ஈவினிங்கே தூக்கமா?" என்று கேட்டான், ராஜின் பன்னிரண்டு வருட நண்பன் ஆகாஷ்.
ஆகாஷ், ராஜுடன் பள்ளியிலும், கல்லூரியிலும், அலுவலகத்திலும் ஒன்றாக இருப்பவன். சிங்கப்பூரில் பணி புரிந்து வந்த ஆகாஷ், பெங்களுருக்கு இடமாற்றம் பெற்று ராஜுடன் அவனது அறையில் தங்கியிருந்தான்.
ஆகாஷ் வந்ததும் வராததுமாக தனது மடிக்கணினியை திறந்து உற்று பார்க்க தொடங்கினான். அது வரை அமைதியாய் இருந்த ராஜ் "டேய், வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா?" என்று கிண்டல் பேச்சை தொடங்கினான். "என் பிரச்சனை எனக்கு. நீ போய் தூங்குற வேலைய பாரு" என்றான் ஆகாஷ். மறுநொடி மீண்டும் கணினியினுள் தலையை நுழைத்து தன் வருங்கால வாழ்க்கை துணைவியை தேடும் முயற்சியில் இறங்கினான் (இவனது வாழ்க்கையை "கண்டேன் ராதையை" என்ற தனி தொடரில் படித்து மகிழலாம்).
மீண்டும் படுக்கையில் விழுந்த ராஜ் கடந்த கால கனவுலகின் வாயிலை அடைந்தான்.
மும்பை...
உயிரினை படைத்த பிரம்மனே கண்டு பிரமிக்கும் அழகு.. உலக அழகிகளை ஒட்டுமொத்தமாய் வீழ்த்தும் அழகு... உள்ளம் இனிக்கும் உன்னத அழகு... பூவுலகுக்கு அழகு சேர்க்க வந்த அந்த மங்கை மெல்ல நடந்து ராஜின் விழியிலிருந்து அகன்று சென்றாள். ஆனால் அவன் அகக்கண்ணில் நிரந்தமாய் நிலைபெற்றிருந்தாள். இதுவே ராஜ், அவளை சந்தித்த முதல் தருணம்.
ராஜ், தனது ப்ராஜெக்ட் வேளைகளில் மூழ்கினாலும், தினமும் பார்க்லேஸ் நுழைவாயிலை அடையும் போதெல்லாம் அவளின் நினைவுகள் அவனை தாக்கியது. மீண்டும் அவளை சந்திக்க மனம் ஏங்கியது. ஒரு நாள் தனது வேளையில் மூழ்கியிருந்தான் ராஜ். அவனது மேனேஜெர் அவனை அழைத்து புதிதாய் அந்த ப்ராஜெக்ட்டில் ஒருவர் சேரவிருப்பதாகவும், ராஜ் அவருக்கு பயிர்ச்சியளிக்க வேண்டும் என்றும் கூறினார். ராஜ் இதுபோல் புதிதாய் வருவோருக்கு பயிற்சி அளித்துள்ளதால், அவனும் சரி என்று கூறி தனது பணியை தொடர்ந்தான். அன்று மதியம், ராஜின் மேனேஜெர், ராஜை தனது அறைக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார். ராஜ் அறைக்குள் நுழைந்தவுடன், மேனேஜெர் "Our New team mate is coming now. So want to Introduce you to her" என்றார். "ஓகே" என்று ராஜும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு "Excuse Me May I Come In " என்ற மெல்லிய குரல் ராஜின் காதை வந்தடைந்தது. அதுவரை அமைதியாக காணப்பட்ட ராஜ், சற்றே உணர்ச்சிவசப்பட்டவன் போல் சட்டென்று கதவை நோக்கி திரும்பினான். ஆம்.. அது அவளே தான். தினம் தினம் தனது கவனத்தை ஈர்த்துகொண்டிருந்த அந்த அற்புத பெண்ணே தான் என்பதை உணர்ந்தான்.
ஆயிரம் மின்விளக்குள் ஒன்றாய் சேர்ந்து உண்டாக்கும் ஒளியை விட பன்மடங்கு வெளிச்சம் அந்த அறையை தாக்கியது போல் உணர்ந்தான் ராஜ். வெண்ணிற சுடிதாரில் வைரமாய் ஜொலித்த அவளது முகம் ராஜை மெய்மறக்க செய்தது. .
அவளை வரவேற்ற மேனேஜெர் அவளை ராஜின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர சொன்னார். ராஜை நோக்கி ""Raj, She is Manjula. She is our new joinee. Please explain her about the project requirement and other stuff. And one more thing. She is also from Chennai" என்றார்.